Thothiram Pathirane Deva - தோத்திரம் பாத்திரனே தேவா - Christking - Lyrics

    Thothiram Pathirane Deva - தோத்திரம் பாத்திரனே தேவா

    தோத்திரம் பாத்திரனே தேவா
    தோத்திரந் துதியுமக்கே
    நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
    நித்தியம் துதியுமக்கே

    சத்துரு பயங்களின்றி -நல்ல
    நித்திரை செய்ய எமை
    பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
    சுற்றிலுங் கோட்டையானாய்

    விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின்
    விழிகளை மூடாமல்
    துடி கொள் தாய்போல் படிமிசை எமது
    துணை எனக் காத்தவனே

    காரிருள் அகன்றிடவே -நல்ல
    கதிரொளி திகழ்ந்திடவே
    பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
    பாங்கு சீராக்கி வைத்தாய்

    இன்றைத் தினமிதிலும் -தொழில்
    எந்தெந்த வகைகளிலும்
    உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
    ஊன்றியே காத்துக் கொள்வாய்
    Thothiram Pathirane Deva - தோத்திரம் பாத்திரனே தேவா Thothiram Pathirane Deva - தோத்திரம் பாத்திரனே தேவா Reviewed by Christking on May 28, 2018 Rating: 5
    Powered by Blogger.