Kaalaiyila maraiyira megatha pola - காலையில மறையிற மேகத்தப் போல - Christking - Lyrics

    Kaalaiyila maraiyira megatha pola - காலையில மறையிற மேகத்தப் போல

    காலையில மறையிற [D min 83 4/4]

    காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
    எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு

    Kaalaiyila maraiyira megatha pola en bakthi irukku
    Endha velaiyilum paavathukku aasapattu thaan
    En buthi irukku

    ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் - அட
    எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன்
    ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் - அட
    கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்

    Yemaathuren naan yemaathuren - ada
    Ellaa janathaiyum yemaathuren
    Yemaandhuten naan yemaandhuten - ada
    Kadaisiyil naan dhaane yemaandhuten

    மந்தைகள பத்தி என்ன கவல - அட
    மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல
    ஆத்துமாவை பத்தி என்ன கவல
    இந்த உலகமே மயங்குது என்னோட Styleல
    என்னென்னமோ நான் அளக்குறேன் - என்
    எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் - அட
    கற்பனையில் பிரசங்கிச்சேன்
    விற்பனையில் கண்ண வெச்சேன்

    Mandhaigalai pathi enna kavala - ada
    Maasa maasam kaanikkaithaan ennoda mind la
    Aathumaavai pathi enna kavala
    Indha ulagame mayangudhu ennoda style la
    Ennanamo naan alakkuren - en
    Ennam pola vedhatha velakkuren - ada
    Karpanaiyil prasangichen
    Virpanaiyil kanna vechen

    அற்புதங்கள் கர்த்தரோட poweru
    அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over
    தரிசனம் கொடுப்பது கர்த்தரு
    அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru
    சத்தியத்த நான் வித்துபுட்டேன்
    சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன்
    அட நான் மட்டும்தான் மேடையில
    மக்களெல்லாம் பாடையில

    Arpudhangal kartharoda poweru
    Adhu ennalathaan aagudhunnu solradhu overu
    Dharisanam kodupathu kartharu
    Adha solli solli oturene andraadam traileru
    Sathiyatha naan vithu putten
    Sothu sugam naan sethuputten
    Ada naan mattum thaan medaiyila
    Makkal ellaam paadaiyila

    காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் - அட
    கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன்
    ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் - அத
    கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன்
    Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு - என்
    பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு
    அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு
    ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு

    Kaasa kotti pattam ellaam vaanguren - ada
    Kanda neram enna pathi pesathaan yenguren
    Yeno thaano ooliyathai seyyuren - atha
    Kelvi kettaa makkal mela singam pol paayuren
    Proceduraa ellaam maaripochu
    En prasangamo verum vetti pechu
    Ada tharperumai jaasthi aachu
    Ooliyangal naasthi aachu

    ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் - இப்ப
    ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன்
    ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் - இப்ப
    ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன்
    மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம்
    என் மேலேயே எனக்கு கள்ள நேசம்
    அட ஊருக்குத்தான் உபதேசம்
    உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்

    Aarambathil uththamamaa nadanthen - ippa
    Aadambara vaalkaiyila andraadam aaduren
    Aandavare kedhiyinnu kedandhen - ippa
    Aanaa oonaa pangaalarin veetukku oduren
    Mothathula ellaam nalla vesham
    Enmelaye enakku kalla nesam
    Ada oorukkuthaan ubathesam
    Ullukulla romba mosam
    Kaalaiyila maraiyira megatha pola - காலையில மறையிற மேகத்தப் போல Kaalaiyila maraiyira megatha pola - காலையில மறையிற மேகத்தப் போல Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.