Maname O Maname - மனமே ஓ மனமே - Christking - Lyrics

    Maname O Maname - மனமே ஓ மனமே

    மனமே ஓ மனமே [D min 96 4/4]
    மனமே ஓ மனமே
    நீ ஏன் அழுகிறாய்
    தினமே அனுதினமே
    துயரில் விழுகிறாய்

    Maname O Maname
    Nee yen azhugiraai
    Dhiname anu dhiname
    Thuyaril vizhugiraai

    சுமக்க முடியாத சுமையை
    நீ ஏன் சுமக்கிறாய்
    சகிக்க முடியாத வலியில்
    நீ ஏன் தவிக்கிறாய்
    உன் பாரங்களை தந்துவிடு
    இயேசுவிடம் வந்துவிடு
    மற்றவை மறந்துவிடு

    Sumakka mudiyaadha sumaiyai
    Nee yen sumakkiraai
    Sagikka mudiyaadha valiyil
    Nee yen thavikkiraai
    Un baarangalai thandhuvidu
    Yesuvidam vandhuvidu
    Matravai marandhuvidu

    எவரும் அறியா ரகசியம்
    உனக்குள் இருக்குதோ
    மறக்க முடியா அவ்விஷயம்
    உன் மனதை உருத்துதோ
    நம் தேவனிடம் தயவுண்டு - நீ
    வேண்டிக்கொண்டால் விடையுண்டு
    விடுதலை உனக்குண்டு

    Yevarum ariyaa ragasiyam
    Unakkul irukkudho
    Marakka mudiyaa avvishayam
    Un manadhai uruthudho
    Nam dhevanidam dhayavundu
    Nee vendikondaal vidai undu
    Vidudhalai unakkundu

    உலகம் தரமுடியா அமைதி
    தருபவர் இயேசுதான்
    கலகம் வழிந்தோடும் உலகில் -
    உன் புகலிடம் இயேசுதான்
    நீ தேடுகின்ற ஆதரவும்
    நாடுகின்ற உண்மை அன்பும்
    இயேசு ஒருவரில் தான்

    Ulagam thara mudiyaa amaidhi
    Tharubavar yesu thaan
    Kalagam vazhindhodum ulagil
    Un pugalidam yesudhaan
    Nee thedugindra nimmadhiyum
    Naadugindra unmai anbum
    Yesu oruvaril thaan
    Maname O Maname - மனமே ஓ மனமே Maname O Maname - மனமே ஓ மனமே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.