Ummai aaraadhikka thaan - உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் - Christking - Lyrics

    Ummai aaraadhikka thaan - உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்

    உம்மை ஆராதிக்கத்தான் [E min 86 4/4]

    உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
    உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
    உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
    உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

    Ummai aaraadhikka thaan ennai arindheer
    Ummai aarparikka thaan ennai azhaitheer
    Undhan naamam uyarthave ennil jeevan kodutheer
    Ummai patrikolla thaan ennai padaitheer

    ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
    உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
    முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
    மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
    வாழ்கின்ற வேந்தன்

    Yezhu vinmeen kaithanil ponvilakku mathiyil
    Ulaavidum unnadhar neere umakku nigar
    Mundhinavarum neerthaan pindhinavarum neerthaan
    Marithavarum neerthaan moondraam naalil
    Uyir petru vaalgindra vendhan

    எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
    கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
    தேவ ஆவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
    எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
    ஆண்டவர் மைந்தன்

    Eppakkamum koormaiyo pattayam patrineero
    Kangal akkni jwaalaiyo paadhangal vengalamo
    Dheva aavi yezhundu vinmeengalum yezhundu
    Ellaam yesuvil undu apperpatta azhagulla
    Aandavar mainthan

    பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
    தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
    நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
    நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
    நீர் ஆள்கின்றீர் என்றும்

    Parisuthar neerthaane sathiyarum neerthaane
    Dhaaveedhin thiravukol kondavarum neerthaane
    Neer poottiya vaasalai maanidan thirappaano
    Neer thirandha vaasalai pootti vaikka koodumo
    Neer aalgindreer endrum

    உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
    தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
    நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
    ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
    நீர் வாழ்க வாழ்க என்று

    Unmaiyum sathiyamum ulladangum saatchiye
    Dhevanin sirushtikku aadhiye amen neere
    Needhiyulla naadhane neer endrum nithiyare
    Aalayathin aandavaa aaraadhanai naayagaa
    Neer vaazhga vaazhga endru

    அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
    ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
    பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
    மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே

    Appa pidhave naan ummai thuthipen - endhan
    Aathma nesare naan ummai thuthipen
    Parisutha aaviye endrum ummai thuthipen
    Moondril ondraai vilangum en dheva dhevane
    Ummai aaraadhikka thaan - உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் Ummai aaraadhikka thaan - உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.