Parane en idhayathil vaarum - பரனே என் இதயத்தில் வாரும் - Christking - Lyrics

    Parane en idhayathil vaarum - பரனே என் இதயத்தில் வாரும்

    பரனே [C min T95 4/4]

    பரனே என் இதயத்தில் வாரும்
    பரநோக்கம் நிறைவேற்ற வாரும்

    Parane en idhayathil vaarum
    Paranokkam niraivetra vaarum

    அனுதினம் என்மனம் கழுவிடும்
    அழகிய புதுமனம் தந்திடும்
    பரிவுடன் பாவியை கண்டிடும் - என்
    சுயமதை திருசலவை செய்திடும்

    Anudhinam en manam kazhuvidum
    Azhagiya pudhu manam thandhidum
    Parivudan paaviyai kandidum - en
    Suyamadhai thirusalavai seidhidum

    அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை
    புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
    பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
    அழுகிய சிந்தனை மங்கவே
    மனதினுள் வசனங்கள் தங்கவே
    அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
    அடைக்கலம் அருளுமே துங்கவே

    Adhattividum nenjai agatrividum nanjai
    Puguthividum enakkul parama sindhai
    Parisutham ketkiren um kuzhandhai
    Azhugiya sindhanai mangave
    Manadhinul vasanangal thangave
    Agamagizhndhena thullam pongave
    Adaikkalam arulume thungave

    திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்
    கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
    கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
    புவியதன் சோதனை குறையவே
    பரமனின் போதனை நிறையவே
    பகலதன் பிள்ளையாய் வளரவே
    உலகினில் தீபமாய் ஒளிரவே

    Thirukkullavan minjum kirukkullavan kenjum
    Karathudane ummidam kadharugiren
    Kirubai kidaikkathaane padharugiren
    Puviyadhan sodhanai kuraiyave
    Paramanin bodhanai niraiyave
    Pagaladhan pillaiyaai valarave
    Ulaginil dheebamaai olirave

    மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்
    உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் - கெட்ட
    உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
    அகமதின் கபடினை தள்ளவே
    ஆவியின் கனிதனை அள்ளவே
    அசுரனை அனுதினம் வெல்லவே
    அவனியில் கிருபையைச் சொல்லவே

    Mayakkathile manam kirakkathile gunam
    Urakkathil irundhennai ezhuppi vidum - ketta
    Unarchigal anaithaiyum koluthi vidum
    Agamadhin kabadinai thallave
    Aaviyin kanidhanai allave
    Asuranai anudhinam vellave
    Avaniyil kirubaiyai chollave
    Parane en idhayathil vaarum - பரனே என் இதயத்தில் வாரும் Parane en idhayathil vaarum - பரனே என் இதயத்தில் வாரும் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.