Pasuthol porthiya puliyaa - பசுத்தோல் போர்த்திய புலியா - Christking - Lyrics

    Pasuthol porthiya puliyaa - பசுத்தோல் போர்த்திய புலியா

    பசுத்தோல் போர்த்திய [D min T65 4/4]

    பசுத்தோல் போர்த்திய புலியா நீ
    பயிரை மேயும் வேலியா
    வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
    இதுதான் உந்தன் வாழ்க்கையா

    Pasuthol porthiya puliyaa - nee
    Payirai meyum veliyaa
    Veliyil orugunam kovilil oru gunam
    Idhudhaan undhan vaazhkaiyaa

    அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
    வாழும் வாழ்க்கையில் பயனில்லை
    தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
    வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை

    Analum illaamal kulirum illaamal
    Vaazhum vaazhkaiyil payanillai
    Dhevan mel anbum piranmel anbum
    Vaazhkaiyil irundhaal bayamillai

    குடியை தேடி புகையை ஊதி
    வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
    ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
    பயங்கரமான பாவ குற்றம் - இது

    Kudiyai thedi pugaiyai oodhi
    Vaazhnaal muzhuvadhum kaliyaattam
    Aalayathil mattum magaa parisutham
    Bayangaramaana paava kutram

    வாயில் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
    மனதில் முழுவதும் மாய்மாலம்
    உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
    கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்

    Vaayil vanjagam veen vaakuvaadham
    Manadhil muzhuvadhum maaimaalam
    Unnaal kettupogum dhevanadhu naamam
    Kristhuvukunnaal avamaanam

    ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
    ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
    அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
    தேவனுக்குன்னால் மனவேதனை
    Aaviyil nirambi baashaigal pesi
    Nyaayitrukizhamaiyil aaraadhanai
    Adutha naale paavathukku adimai
    Dhevanukkunnaal manavedhanai

    கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
    இருளிலிருந்து வெளியே வா
    ஆத்துமா இரட்சிப்பு மிகவும் அவசியம்
    இதயத்தை இன்று தேவனுக்கு தா

    Kangal thirandhaal velichamundaagum
    Irulil irundhu veliye vaa
    Aathumaa ratchippu migavum avasiyam
    Idhayathai indru dhevanukku thaa
    Pasuthol porthiya puliyaa - பசுத்தோல் போர்த்திய புலியா Pasuthol porthiya puliyaa - பசுத்தோல் போர்த்திய புலியா Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.