Suththa irudhayathai sirushtiyume - சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே - Christking - Lyrics

    Suththa irudhayathai sirushtiyume - சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

    சுத்த இருதயத்தை [D min 112 4/4]
    சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
    செத்த மனிதனை உயிர்ப்பியுமே
    சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
    சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

    Suththa irudhayathai sirushtiyume
    Seththa manidhanai uyirpiyume
    Sikkundu thavikkiren ulaginile
    Seekiram vandhu ennai thappuviyume

    பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
    அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
    மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
    கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
    உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

    Paavangal neenga ennai suththigariyum
    Akkramam neenga ennai kazhuvividum
    Meerudhal arindhen paavangal therindhen
    Kanmunne pollaanginai nadathi vitten
    Um munne paavangalai uduthi vitten

    உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
    ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
    சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
    வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
    கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

    Ullathil unmai thanai virumbugireer
    Nyaanathai ennidathil vilambugireer
    Suthigarithidum kutram erithidum
    Ven mazhaipola ennai venmai aakkidum
    Kanmalai neerennnai nal thanmai aakkidum

    நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
    உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
    பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
    ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

    Nal idhayathai ennil sirushtiyume
    Ul idhayathil aavi pudhuppiyume
    Paaviyai thallaadheer aaviyai allaadheer
    Ratchippin sandhoshathai enakku thaareer
    Urchaaga aavi ennai thaanga seiguveer


    வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
    கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
    பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
    பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
    கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே

    Vettunda aavidhanai yetru kolgireer
    Kattunda paavidhanai thetri chelgireer
    Paava pazhigalai neekidum ayyane
    Poyyanai maatrum paraloga meyyane
    Kembeerithummai paadi potriduvene
    Suththa irudhayathai sirushtiyume - சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே Suththa irudhayathai sirushtiyume - சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.