Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி - Christking - Lyrics

    Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி

    உன்னையன்றி வேறே கெதி
    ஒருவரில்லையே ஸ்வாமீ

    அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ
    அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ

    பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி
    பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி
    கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான்
    கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ

    அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி
    அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ
    கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க்
    கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ

    எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி
    எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி
    பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும்
    பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ

    கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
    கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
    உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால்
    உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ
    Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.