Paar Potrum - பார்போற்றும் வேந்தன் - Christking - Lyrics

    Paar Potrum - பார்போற்றும் வேந்தன்

    Song : PAAR POTRUM
    Album : JAMAKKARANIN SATHAM
    Lyrics,Tune & Sung by : Pr..REEGAN GOMEZ
    Music : Stephen Sanders

    பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
    பாரெங்கும் சொல்லிட புறப்படு
    பாழான ஸ்தலங்கள் யாவையும்
    ராஜாவின் அரண்மனையாக்கிடு! - (2)
    எழும்பிடு வாலிபனே!
    எழும்பிடு கன்னிகையே! - (2)
    தேசத்தை கலக்கிடும் காலமிது
    அக்கினியாய் எழும்பிடும் நேரமிது - (2)

    1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட
    அக்கினியாக புறப்படு
    பாவ சாபங்கள் யாவும் நீக்கிட
    வல்லமையாக எழும்பிடு - (2)
    வல்லமை உனக்குள்ளே
    தேவ அக்கினி உனக்குள்ளே - (2)
    எழும்பிடு எழும்பிடு வாலிபனே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!
    எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது! - பார் போற்றும்

    2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்
    மாந்தரை மீட்டிட புறப்படு
    கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட
    இரத்த சாட்சியாய் எழும்பிடு - (2)
    வல்லமை உனக்குள்ளே
    தேவ அக்கினி உனக்குள்ளே - (2)
    எழும்பிடு எழும்பிடு வாலிபனே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!
    எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது! - பார் போற்றும்

    3) அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
    நாமம் உயர்த்திட புறப்படு
    ஆதி எழுப்புதல் தேசம் (சபைகள்) கண்டிட
    தரிசனத்தோடே எழும்பிடு - (2)
    வல்லமை உனக்குள்ளே
    தேவ அக்கினி உனக்குள்ளே - (2)
    எழும்பிடு எழும்பிடு வாலிபனே தேவ சேனை உன்னை அழைக்கிறது!
    எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது! - பார் போற்றும்

    பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
    பாரெங்கும் சொல்லிட புறப்படுவோம்
    பாழான ஸ்தலங்கள் யாவையும்
    ராஜாவின் அரண்மனையாக்கிடுவோம்! - (2)
    எழும்புவோம் திருச்சபையே
    செல்லுவோம் சேனைகளாய் -(2)
    தேசத்தை கலக்கிடும் காலமிது
    அக்கினியாய் எழும்பிடும் நேரமிது - (2) - பார் போற்றும்


    Paar Potrum - பார்போற்றும் வேந்தன் Paar Potrum - பார்போற்றும் வேந்தன் Reviewed by Christking on August 25, 2018 Rating: 5
    Powered by Blogger.