Un Mana Virupathai - உன் மனவிருப்பத்தை - Christking - Lyrics

    Un Mana Virupathai - உன் மனவிருப்பத்தை

    Song: Un Mana Virupathai
    Album: Nesarae volume 2
    Music, Lyrics And Sung by: Godson GD
    Year of Release: 2007

    உன் மனவிருப்பத்தை அளித்திடுவார் அஞ்சாதே - உன் நேசரே (2)

    எரிகோ கோட்டைகள் போல் தடைகள் வந்தாலும்
    வனாந்திரம் போன்ற நிலை உனக்கிருந்தாலும்
    தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே - உன் மன

    1) அழைத்தவரோ உண்மையுள்ளவர்
    வாக்குப் பண்ணினவர் மாறாதவர் - (2)
    ஜெபத்திலே கேட்பது தாமதித்தாலும் - ஆ...ஆ... (2)
    நிச்சயமாய் முடிவொன்று உனக்கு உண்டு
    நம்பிக்கை வீணாகப் போகாது - எரிகோ

    2) அன்னாளின் கண்ணீர் அவர் துடைத்தார்
    உன் கண்ணீர் ஜெபத்துக்கும் பதில் கொடுப்பார் - (2)
    மீன் கேட்டால், பாம்பை அவர் தருவாரோ - ஆ... ஆ... (2)
    பொய் சொல்ல தேவனும் மனுஷனல்ல
    வாக்குகள் மாறிட வாய்ப்புமில்ல - எரிகோ


    Un Mana Virupathai - உன் மனவிருப்பத்தை Un Mana Virupathai - உன் மனவிருப்பத்தை Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.