Belathinaal Alla - பெலத்தினால் அல்ல - Christking - Lyrics

    Belathinaal Alla - பெலத்தினால் அல்ல

    LYRICS: RAVI BHARATH
    MUSIC: RUFUS RAVI
    RHYTHM: RUFUS RAVI
    ALBUM: AAYATHAMAA VOL-6

    பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியனால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும் - 2
    ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு - பெலத்தினால்

    1. அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் சுயமல்லவா
    நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா - 2
    ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - பெலத்தினால்

    2. கர்த்தர் செய்ய நினைத்து விட்டால் அதற்கு ஒரு தடையில்லையே
    மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே - 2
    ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - பெலத்தினால்

    3. இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை
    கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை - 2
    ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - பெலத்தினால்

    4. அநேகரைக் கொண்டாகிலும் கொஞ்ச பேரைக் கொண்டாகிலும்
    இரட்சிப்பது கடினமில்லை நம் தேவனுக்குத் தடையுமில்லை
    ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு - பெலத்தினால்


    Belathinaal Alla - பெலத்தினால் அல்ல Belathinaal Alla - பெலத்தினால் அல்ல Reviewed by Christking on September 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.