Ratchaga Piranthara - இரட்சகர் பிறந்தாரே - Christking - Lyrics

    Ratchaga Piranthara - இரட்சகர் பிறந்தாரே

    MUSIC: NA
    SUNG BY: NA
    ALBUM: RATCHAGAR PIRANTHARAE VOL-6

    இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே
    வார்த்தை இன்று மனிதனாக பூமியில் பிறந்தாரே
    புதுமலர் பூக்க நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த
    இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாளிது - இரட்சகர்

    1. விண்ணகத்து வேந்தனுக்கு தலைசாய்க்க இடமில்லை
    மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது - 2
    நம்மை மீட்க ஏழை உருவில் இம்மானுவேலன் வந்தார்
    இமைப் போல நம்மைக் காக்க இறைமகனாய் இன்று பிறந்தார் - 2
    அன்னை மரியின் தாலாட்டில் கண்கள் மூடித் தூங்கிடவே
    விண்ணில் மின்னும் தாரகையெல்லாம் கண் சிமிட்டி சிரித்திடவே
    - இரட்சகர்

    2. மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக் குலுங்கும் சிறுமலரும்
    தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே - 2
    புள்ளிமானும் சின்ன குயிலும் அழகாய் ஆடும் மயிலும்
    உயிர்கள் யாவும் மகிழ உலகில் வந்த அழகே
    உந்தன் பிறந்த நாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே
    கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உம்மை வணங்கி போற்றிடுதே
    - இரட்சகர்


    Ratchaga Piranthara - இரட்சகர் பிறந்தாரே Ratchaga Piranthara -  இரட்சகர் பிறந்தாரே Reviewed by Christking on September 21, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.