Unga Kooda Nadakave - உங்க கூட நடக்கவே

    Unga Kooda Nadakave - உங்க கூட நடக்கவே

    Song: Unga Kooda Nadakave
    Artist: Ranjith Jeba
    Album: Nissi
    Licensed: D.K. Enterprises

    உங்க கூட நடக்கவே நான் விரும்புறேன்
    உங்களோட வாழவே ஆசைப்படுகிறேன் - 2

    உந்தன் அன்பை விட்டு நான்
    வேறு எங்கு செல்லுவேன்?
    எந்தன் உயிரை பார்க்கிலும்
    நான் உம்மை நேசிப்பேன் - 2

    இயேசுவே (ஏசய்யா) எந்தன் உயிர்த்துடிப்பும் நீர் தானய்யா
    ஏசய்யா (இயேசுவே) எனது ஆசையெல்லாம் நீர் தானய்யா - 2

    1) நான் பசியால் வாடும்போது
    உணவு (எனக்கு) ஊட்டுகிறீர் -2
    நான் இருளில் நடக்கும்போது
    தீபஜோதியாய் வருகிறீர் - 2 - இயேசுவே

    2) கோலும் கையுமாக
    கடந்து வந்த என்னை - 2
    இரண்டு பரிவாரங்களினால்
    நிரப்பியே அனுப்பினீர் - 2 - இயேசுவே


    Unga Kooda Nadakave - உங்க கூட நடக்கவே Unga Kooda Nadakave - உங்க கூட நடக்கவே Reviewed by Christking on September 14, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.