Anbe Pradhanam - அன்பே பிரதானம் - Christking - Lyrics

    Anbe Pradhanam - அன்பே பிரதானம்

    Sung by: RESHMA ABRAHAM
    Music By: JOLLEE ABRAHAM
    Lyric & Tune: Traditional
    Produced by : ROHITH RECORDINGS

    அன்பே பிரதானம் சகோதர
    அன்பே பிரதானம்

    பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
    இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

    பலபல பாஷை படித்தறிந்தாலும்
    கலகல வென்னும் கைம்மணியாமே

    என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
    பணிய அன்பில்லால் பயனதிலில்லை

    சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
    போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

    புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
    பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

    சினமடையாது தீங்கு முன்னாது
    தினமழியாது தீமை செய்யாது

    சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
    மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

    Anbe pradhanam sagothara Lyrics in English

    anpae pirathaanam sakothara
    anpae pirathaanam

    pannputru njaanam parama nampikkai
    inpa visvaasam ivaikali lellaam

    palapala paashai patiththarinthaalum
    kalakala vennum kaimmanniyaamae

    en porul yaavum eenthaliththaalum
    panniya anpillaal payanathilillai

    saanthamum thayavum sakala narkunamum
    pontha saththiyamum porumaiyumulla

    pukalitru maappu polivu poraamai
    pakaiya niyaayap paavamunj seyyaa

    sinamataiyaathu theengu munnaathu
    thinamaliyaathu theemai seyyaathu

    sakalamun thaangum sakalamum nampum
    mikaipada ventum maenmai pettaோngum


    Anbe Pradhanam - அன்பே பிரதானம் Anbe Pradhanam - அன்பே பிரதானம் Reviewed by Christking on October 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.