Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனை - Christking - Lyrics

    Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனை

    Album: Vallavar
    Sung by: Beryl Natasha
    Lyrics & Tune: Joseph Vinoth @ Joevin
    Music : Rajkumar

    ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
    உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2)

    1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் - (2)
    களிமண்ணை எடுத்து பாத்திரமாக
    என்னையும் வனைந்து உருவாக்கினீர்
    நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
    என்னையும் உமக்காய் படைத்தீரே
    உம்மை ஸ்தோத்தரிப்பேன் - ஸ்தோத்தரிப்பேன்

    2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் - (2)
    மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
    கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
    மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
    உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
    உம்மை ஸ்தோத்தரிப்பேன் - ஸ்தோத்தரிப்பேன்

    3) அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
    அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
    சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
    அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
    உம்மை ஸ்தோத்தரிப்பேன் - ஸ்தோத்தரிப்பேன்


    Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனை Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனை Reviewed by Christking on October 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.