Anbendra Mazlaiyile - அன்பென்ற மழையிலே - Christking - Lyrics

    Anbendra Mazlaiyile - அன்பென்ற மழையிலே

    Album: Minsara Kanavu
    Music: A. R. Rahman
    Lyrics: Vairamuthu
    Singers: Anuradha Sriram

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே
    விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே
    கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
    சிசுபாலன் தோன்றினானே

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
    புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

    கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
    கருணைமகன் தோன்றினானே
    நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
    ஒளியாகத் தோன்றினானே
    இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
    இறைபாலன் தோன்றினானே
    முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
    புவிராஜன் தோன்றினானே

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே


    Anbendra Mazlaiyile - அன்பென்ற மழையிலே Anbendra Mazlaiyile - அன்பென்ற மழையிலே Reviewed by Christking on October 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.