Nalla Nazhithu - நல்ல நாளிது : Christmas Song - Christking - Lyrics

    Nalla Nazhithu - நல்ல நாளிது : Christmas Song

    நல்ல நாளிது நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்
    இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள்
    {மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார்} x2
    எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே
    நல்ல நாளிது நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்
    இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள்

    {இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம்
    புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம்} x2
    இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார்
    கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே
    நல்ல நாளிது நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்
    இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள்

    {வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும் காலம்
    உண்மை வழியுமாய் நேர்மை சுடருமாய் புனிதமாகும் காலம்} x2
    {நல்தேவன் வந்துதித்தார் நம்மை கரங்களில் ஏந்திக்கொண்டார்} x2
    தோல்விகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே
    நல்ல நாளிது நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்
    இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள்
    {மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார்} x2
    எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே
    நல்ல நாளிது நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்
    இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள்

    Tamil Christmas Song For Singing Competition
    Nalla Nazhithu - நல்ல நாளிது : Christmas Song Nalla Nazhithu  - நல்ல நாளிது : Christmas Song Reviewed by Christking on November 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.