Baktharudan Paaduvaen - பக்தருடன் பாடுவேன் - Christking - Lyrics

    Baktharudan Paaduvaen - பக்தருடன் பாடுவேன்


    Pallavi

    Paktharudan Paaduvaen - Paramasapai
    Muktharkulaam Kooduvaen

    Anupallavi

    Anpaal Annaikkum Arulnaathan Maarpinil
    Inpam Nukarnthilaippaaruvor Kooda Naan
    - Paktharudan

    Saranangal

    1. Anpu Aliyaathallo Avvannnamae
    Anpar en Inparkalum,
    Ponnatip Poomaanin Puththuyir Pettathaal
    Ennudan Thanguvaar Ennnnooli Kaalamaay
    - Paktharudan

    2. Ikamum Paramum Onte Ivvatiyaark - Ku
    Akamum Aanndavan Atiyae,
    Sukamum Narselvamum Suttamum Uttamum,
    Ikalillaa Ratchakan Inpap Porpaathamae
    - Paktharudan

    3. Thaayin Thayavutaiyathaayth Thamiyan Nin
    Seyan Kann Moodukaiyil,
    Paayolip Pasum Ponnae, Pakthar Sinthaamanni,
    Thooyaa, Thiruppaathath Tharisanam Thantharul
    - Paktharudan


    பல்லவி

    பக்தருடன் பாடுவேன் – பரமசபை
    முக்தர்குழாம் கூடுவேன்

    அனுபல்லவி

    அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
    இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

    சரணங்கள்

    1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
    அன்பர் என் இன்பர்களும்,
    பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
    என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய்
    – பக்தருடன்

    2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
    அகமும் ஆண்டவன் அடியே,
    சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
    இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே
    – பக்தருடன்

    3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
    சேயன் கண் மூடுகையில்,
    பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
    தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள்
    – பக்தருடன்

    Baktharudan Paaduvaen - பக்தருடன் பாடுவேன் Baktharudan Paaduvaen - பக்தருடன் பாடுவேன் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.