Aathiyil Irulai - ஆதியில் இருளை - Christking - Lyrics

    Aathiyil Irulai - ஆதியில் இருளை


    1. ஆதியில் இருளை
    அகற்றி, ஒளியை
    படைத்த நீர்,
    உம் சுவிசேஷத்தை
    கேளாத தேசத்தை
    கண்ணோக்கி கர்த்தாவே,
    பிரகாசிப்பீர்.

    2. நற்சீராம் சுகத்தை,
    மெய்ஞான பார்வையை
    அளித்த நீர்,
    நைந்தோர் சுகிக்கவும்
    கண்ணற்றோர் காணவும்
    மானிடர் பேரிலும்
    பிரகாசிப்பீர்.

    3. சத்தியமும் நேசமும்
    உள்ளான ஜீவனும்
    அளிக்கும் நீர்,
    வெள்ளத்தின் மீதிலே
    புறாப்போல பறந்தே,
    பார் இருள் நீக்கியே,
    பிரகாசிப்பீர்.

    4. ஞானமும் வன்மையும்,
    தூய்மையும் அருளும்
    திரியேகா நீர்,
    கடலைப் போன்றதாய்
    மெய்யொளி எங்குமாய்,
    பரம்பும் வண்ணமாய்,
    பிரகாசிப்பீர்.


    1. Aathiyil Irulai
    Akatti, Oliyai
    Pataiththa Neer,
    Um Suviseshaththai
    Kaelaatha Thaesaththai
    Kannnnokki Karththaavae,
    Pirakaasippeer.

    2. Narseeraam Sukaththai,
    Meynjaana Paarvaiyai
    Aliththa Neer,
    Nainthor Sukikkavum
    Kannnattar Kaanavum
    Maanidar Paerilum
    Pirakaasippeer.

    3. Saththiyamum Naesamum
    Ullaana Jeevanum
    Alikkum Neer,
    Vellaththin Meethilae
    Puraappola Paranthae,
    Paar Irul Neekkiyae,
    Pirakaasippeer.

    4. Njaanamum Vanmaiyum,
    Thooymaiyum Arulum
    Thiriyaekaa Neer,
    Kadalaip Pontathaay
    Meyyoli Engumaay,
    Parampum Vannnamaay,
    Pirakaasippeer.

    Aathiyil Irulai - ஆதியில் இருளை Aathiyil Irulai - ஆதியில் இருளை Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.