Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

    Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்


    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
    துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்
    – அதிசய

    1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
    என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே
    – அதிசய

    2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
    வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே
    – அதிசய

    3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
    விளம்பின போதகம் மறந்திடலாமோ?
    – அதிசய

    4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
    முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே
    – அதிசய

    5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
    மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
    – அதிசய


    Anparin Naesam Aar Sollalaakum? Athisaya
    Anparin Naesam Aar Sollalaakum?
    Thunpa Akoram Thodarnthidum Naeram
    - Athisaya

    1. Ithuven Sareeram Ithuventan Raththam
    Ennai Ninainthidumpati Arunthu Mentarae
    - Athisaya

    2. Pirinthidum Vaelai Nerunginathaalae
    Varunthina Seesharkkaay Maruki Nintarae
    - Athisaya

    3. Viyaalaniravinil Viyaakulaththotae
    Vilampina Pothakam Maranthidalaamo?
    - Athisaya

    4. Setiyum Kotiyum Pol Sernthu Thammotae
    Mutivu Pariyantham Nilaippeerentarae
    - Athisaya

    5. Pakthar Katkaakap Paramanai Nnokki
    Meththavum Ookkamaay Vaenntik Konndaarae
    - Athisaya

    Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.