Devapitha Enthan - தேவப்பிதா எந்தன் - Christking - Lyrics

    Devapitha Enthan - தேவப்பிதா எந்தன்


    தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

    ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

    ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி யென்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
    சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
    சுக தைலம் கொண்டென் தலையை
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்

    ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Thaevappithaa Enthan Maeyppan Allo
    Sirumai Thaalchchi Ataikilaenae

    Aavalathaay Ennaip Paimpul Mael
    Avar Maeyththamar Neer Arulukintar

    Aaththumanthannaik Kulirappannnni
    Atiyaen Kaalkalai Neethi Yennum
    Naerththiyaam Paathaiyil Avar Nimiththam
    Nithamum Sukamaay Nadaththukintar

    Saa Nilal Pallath Thirangidunum
    Sattam Theengu Kanndanjaenae
    Vaanaparan Ennotiruppaar
    Valai Thatiyum Kolumae Thaettum

    Pakaivark Kethirae Oru Panthi
    Paangaay Enakkenter Paduththi
    Suka Thailam Konnden Thalaiyai
    Sukamaay Apishaekam Seykuvaar

    Aayul Muluvathum en Paathram
    Arulum Nalamumaay Nirampum
    Naeyan Veettinil Sirappotae
    Neduvaal Kutiyaay Nilaiththiruppaen

    Devapitha Enthan - தேவப்பிதா எந்தன் Devapitha Enthan - தேவப்பிதா எந்தன் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.