Engal Poraauythangal - எங்கள் போராயுதங்கள் - Christking - Lyrics

Engal Poraauythangal - எங்கள் போராயுதங்கள்


எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா

தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

கிறிஸ்துவின் திருவசனம்
ஆவியின் பட்டயமே
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்

நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்

சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்

விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்
தீயவன் தீக்கணைகள்
அவிழ்த்து ஜெயம் எடுப்போம்


Engal Poraayuthangal
Aaviyin Vallamaiyae
Arannkalai Nirmoolamaakkum
Thaevan Tharum Pelanae

Kiristhuvukkul Vaalvathanaal
Vetti Nichchayamae
Engum Elupputhal
Inthiyaa Kiristiyaa

Thaevanukkethiraana
Ellaa Manitha Ennnangalai
Kiristhuvin Kattuppaattukkul
Geelpaduththi Jeyam Eduppom

Kiristhuvin Thiruvasanam
Aaviyin Pattayamae
Anuthinam Arikkai Seythu
Alakaiyai Thuraththiduvom

Narseythi Mulanguvathae
Namathu Mithiyatikal
Aaththuma Paaraththinaal
Arivippom Suvisesham

Saththiyam Itaikkachcha
Neethi Maarkkavasam
Iratchippin Nichchayamae
Niranthara Thalaikkavasam

Visuvaasa Vaarththaikalthaan
Kaakkum Nam Kaedakam
Theeyavan Theekkannaikal
Avilththu Jeyam Eduppom

Engal Poraauythangal - எங்கள் போராயுதங்கள் Engal Poraauythangal - எங்கள் போராயுதங்கள் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.