Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்

    Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்


    இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ
    எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே

    அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்
    ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே

    அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த
    ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே

    ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு
    அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே

    சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்
    ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே

    வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று
    வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே

    தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம்
    சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே


    Intha Vaelaiyinil Vantharulum Thaeva Aaviyae – Ippo
    Engal Meethirangith Thangi Varam Thaarum Aaviyae

    Anthanar Thammidam Vinthai Seytha Sathyaaaviyae – Mun
    Aachchariyamaakak Kaatchi Thantha Njaana Aaviyae

    Archchiyark Kannaanil Arputham Seythaannda Aaviyae – Intha
    Aathirai Meethinil Theethakattiyaalum Aaviyae

    Aarumariyaatha Aaruthal Seythidum Aaviyae – Ingu
    Anjnjaanam Akatti Meynjnjaanam Pukattum Aaviyae

    Siththam Irangaayo Niththiyaraakiya Aaviyae – Arul
    Jeeva Vali Kaattip Paavam Akattidum Aaviyae

    Vaarum Vaarum Kannpaarum Parisuththa Aaviyae – Intu
    Vanthu Sapaimeethil Sinthai Vaiththarulum Aaviyae

    Thaettaravaalan Entettip Pukalnthidum Aaviyae – Nitham
    Siththam Vaiththen Meethil Muttilung Kaaththidum Aaviyae

    Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்  Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.