Um Anbila - உம் அன்பில | Jasinthan - Christking - Lyrics

    Um Anbila - உம் அன்பில | Jasinthan



    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில - நான்
    தினமும் சாய்ந்திடுவேன்

    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில
    - உம் அன்பில

    உம்மை சேரும் நேரத்தில்
    கண்ணீர் மறையும் கண்களில்
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல
    - உம் அன்பில

    சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில்
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்த கணம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காண துடிக்குது என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்கதானே
    - உம் அன்பில


    English


    Um Anbila - உம் அன்பில | Jasinthan Um Anbila - உம் அன்பில | Jasinthan Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.