Kaalai thorum karthane - காலை தோறும் கர்த்தனே - Christking - Lyrics

    Kaalai thorum karthane - காலை தோறும் கர்த்தனே


    காலை தோறும் கர்த்தனே-புது
    கிருபையை தினம் பொழிகின்றீரே
    காலை தோறும் கர்த்தனே

    நம் தேவன் நல்லவரே
    மாதேவன் வல்லவரே
    உம் சமூகம் எனகானந்தமே

    ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
    அன்பின் அலைகள் எழும்புமே
    மலைகள் விலகும் பர்வதம் அகலும்
    மாறா உம் கிருபை நீங்கிடாதே

    ஆதி அதிசயம் அற்புதங்கள்
    வல்லமை நானும் கண்டிடவே
    மகிமையின் சாயல் அணிந்து நானும்
    மந்தில் மறுரூபமாகிடுவேன்

    சபையின் நடுவில் வல்லமை விளங்க
    சந்ததம் ஓங்கும் கழ் நிற்க
    சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
    சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

    கனிமரமாய் நான் செழித்திடவே
    கர்த்தரே உமது பெலன் தாரும்
    காலா காலத்தில் பலனைக் கொடுக்க
    கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

    ஜாதிகள் நடுவே உம் ஜனமே
    கலங்கரை விளக்காய் திகழவே
    எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
    அக்கினி ஆவி ஊற்றிடுவீர்


    Kaalai Thorum Karththanae-puthu
    Kirupaiyai Thinam Polikinteerae
    Kaalai Thorum Karththanae

    Nam Thaevan Nallavarae
    Maathaevan Vallavarae
    Um Samookam Enakaananthamae

    Aaliyin Alaikal Oyaathupol
    Anpin Alaikal Elumpumae
    Malaikal Vilakum Parvatham Akalum
    Maaraa Um Kirupai Neengidaathae

    Aathi Athisayam Arputhangal
    Vallamai Naanum Kanntidavae
    Makimaiyin Saayal Anninthu Naanum
    Manthil Maruroopamaakiduvaen

    Sapaiyin Naduvil Vallamai Vilanga
    Santhatham Ongum Kal Nirka
    Sarva Vallavarae Um Anpin Maarpil
    Saaynthiduvaen Naan Ententumaay

    Kanimaramaay Naan Seliththidavae
    Karththarae Umathu Pelan Thaarum
    Kaalaa Kaalaththil Palanaik Kodukka
    Kannmanni Pol Ennaik Kaaththiduveer

    Jaathikal Naduvae Um Janamae
    Kalangarai Vilakkaay Thikalavae
    Eriyum Theepangal Thodarnthu Eriya
    Akkini Aavi Oottiduveer

    Kaalai thorum karthane - காலை தோறும் கர்த்தனே  Kaalai thorum karthane - காலை தோறும் கர்த்தனே Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.