Kondaduvom Naam - கொண்டாடுவோம் நாம் - Christking - Lyrics

    Kondaduvom Naam - கொண்டாடுவோம் நாம்


    கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
    பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
    எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
    யேகோவா தேவனைக் கொண்டாடுவோம்

    பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
    பாடிக் கொண்டாடுவோம்
    தீயவன் நடுவில் வருவதில்லை
    கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம்

    அகமகிழ்வோம் அகக்களிப்போம்
    ஆனந்த சத்தமிடுவோம்

    நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
    என்று நாம் உயர்த்திடுவோம்
    கர்த்தரின் மகிமை மேகம் போல
    இறங்கட்டும் இந்நாளிலே

    அசைக்க முடியா கூடாரமாவோம்
    அமைதியின் இல்லமாவோம்
    நோயாளி என்று சொல்வதில்லை
    குற்றங்கள் நீங்கியதே

    இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
    பிரமாணம் இதுதானே
    எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
    கட்டளையாய் கொடுத்தார்

    பழைய புளித்த மாவை அகற்றி
    தூக்கி எறிந்திடுவோம்
    துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
    அசுத்தம் அகற்றிடுவோம்

    எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
    முழங்கினார் சிலுவையிலே
    சாவுக்கு அதிபதி சாத்தானை
    சாவாலே வென்றுவிட்டார்


    Konndaaduvom Naam Konndaaduvom
    Panntikaikal Naam Konndaaduvom
    Ekkaalam Oothi Aelu Naatkalum
    Yaekovaa Thaevanaik Konndaaduvom

    Palikal Seluththi Parisuththar Samookaththil
    Paatik Konndaaduvom
    Theeyavan Naduvil Varuvathillai
    Karththaro Jeyam Eduththaar -nam

    Akamakilvom Akakkalippom
    Aanantha Saththamiduvom

    Nallavar Karththar Kirupaiyullavar
    Entu Naam Uyarththiduvom
    Karththarin Makimai Maekam Pola
    Irangattum Innaalilae

    Asaikka Mutiyaa Koodaaramaavom
    Amaithiyin Illamaavom
    Nnoyaali Entu Solvathillai
    Kuttangal Neengiyathae

    Isravael Janaththukku Thaevan Thantha
    Piramaanam Ithuthaanae
    Ekipthu Thaesam Vittu Purappadumpothu
    Kattalaiyaay Koduththaar

    Palaiya Puliththa Maavai Akatti
    Thookki Erinthiduvom
    Thurkkunam Pollaappu Thavirththiduvom
    Asuththam Akattiduvom

    Ellaam Mutinthathu Entu Iratchakar
    Mulanginaar Siluvaiyilae
    Saavukku Athipathi Saaththaanai
    Saavaalae Ventuvittar

    Kondaduvom Naam - கொண்டாடுவோம் நாம் Kondaduvom Naam - கொண்டாடுவோம் நாம் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.