Parir Gethsemane Song Lyrics - Christking - Lyrics

    Parir Gethsemane Song Lyrics


    பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
    பாவியெனக்காய் வேண்டுதல்
    செய்திடும் சத்தம் தொனித்திடுதே

    1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்

    2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்

    3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

    4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
    முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

    5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
    துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்

    6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
    எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்


    Paareer Gethsamanae Poongaavilen Naesaraiyae
    Paaviyenakkaai Vaendudhal
    Seidhidum Saththam Dhoniththidudhae

    1. Dhaegamellaam Varundhi Soagamadaindhavaraai
    Dhaevaadhi Dhaevan Aega Suthan Padum Paadugal Enakkaayae – Paareer

    2. Appaa Ippaaththiramae Neekkum Nin Siththamaanaal
    Eppadiyumum Siththam Seieyya Ennai Thaththam Seidhaen Endraarae – Paareer

    3. Raththaththin Vaervaiyaalae Meththavumae Nanainthae
    Immaanuvaelan Ullamurugiyae Vaedudhal Seidhanarae- Paareer

    4. Mummurai Tharai Meedhae Thaangonnaa Vaedhanaiyaal
    Munnavan Thaanae Veezhndhu Jebiththaarae Paadhagar Meetpuravae – Paareer

    5. Anbin Arul Mozhiyaal Aarudhal Alippavar
    Thunba Vaelaiyil Thaettrvaarindriyae Nondhu Alarugindraar – Paareer

    6. Ennaiyum Thammai Poala Maatrum Immaa Naesaththai
    Enni Yenniyae Ullam Kanindhu Naan Endrum Pugazhndhiduvaen – Paareer

    Parir Gethsemane Song Lyrics Parir Gethsemane Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.