Malaysia Manilirundhu - மலேசிய மண்ணிலிருந்து | Vaazhvin Artham

    Malaysia Manilirundhu - மலேசிய மண்ணிலிருந்து | Vaazhvin Artham



    மலேசிய மண்ணிலிருந்து
    மலர்ந்து மணக்கிறது
    மகிபரை உயர்த்தும் தேவகானம்.

    சொன்ன விதம் புதுமை.
    எடுத்த இடம் அருமை
    அனைத்துமே படு இனிமை..

    கதையான ஒரு இளம்பெண்ணின்
    கண்ணீர் நிறை வாழ்க்கை
    இசையாக இங்கு இறங்கி வந்து
    விழிகளின் வெள்ளங்களை
    வீதியில் நிறைக்கிறது...

    விரும்பியவன் ஏமாற்றிய
    விரக்தியின் கொடும் பிடியில் சாக இருந்தவளை ஒரு
    சக்தி தடுக்கிறது
    வாழும் வலிமையை
    வழங்குகிறது..

    நன்மைகளின்தேவன் அந்த
    நற்குணசாலியைத் தேற்றி
    அணைத்து தெளிவைத் தருகிறார்..

    நீர் இருந்தால் போதும்
    வரும் ஆசிர்வாதம் நீர்
    இல்லையென்றால்
    ஒன்றுமே இல்லை..

    சக மனிதனை நம்பி
    மோசம் போனவர்களுக்கு
    வாழ்வில் பிடிப்பைத் தருபவர்
    கர்த்தர் ஒருவரே என்பதை
    கவிதையாகச் சொன்ன ஒளிப்படம்.

    சகோதரர் மாத்யூராஜ்
    ஒரு கருணையின் கடலைத்
    தனது குரலினில் அடக்கி
    சிதறவே செய்கிறார்.

    மொத்த குழுவினர்க்கும்
    இந்திய சகோதரர் சார்பாக
    நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    கொடிய இந்த கோரோனா தினங்களில்
    இந்தப் பாடல் எங்கள் மனசுகளை
    தன்னிடத்தில் வாங்கி
    கனிவாய் தாலாட்டுகிறது.

    வெளியிட்ட ம்யூசிக் மைண்ட்ஸ்
    நிறுவனத்திற்கு எங்கள்
    நன்றியின் பூக்களை
    பறித்துத் தூவுகிறோம்.


    English


    Malaysia Manilirundhu - மலேசிய மண்ணிலிருந்து | Vaazhvin Artham Malaysia Manilirundhu - மலேசிய மண்ணிலிருந்து  | Vaazhvin Artham Reviewed by Christking on April 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.